எங்களைப் பற்றி

அசைலம் ஹெல்ப் (Asylum Help) என்றால் என்ன?

மைக்ரன்ட் ஹெல்ப் (Migrant Help) நிறுவனத்தின் ஒரு அங்கமான அசைலம் ஹெல்ப் நிறுவனம் UK முழுவதிலும் அடைக்கலம் நாடுபவர்களுக்கான தனிப்பட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்குகிறது. மைக்ரன்ட் ஹெல்ப் நிறுவனமானது 1963 ஆண்டிலிருந்து UK வில் உள்ள புலம்பெயர்பவர்களுக்கு ஆதரவு சேவைகளை வழங்கி வரும் ஒரு UK அறக்கட்டளை ஆகும். மைக்ரன்ட் ஹெல்ப் குறித்த கூடுதல் தகவல்களைக் காண, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

asylum help team

அசைலம் ஹெல்ப்பானது அடைக்கலச் செயல்முறை மிகவும் சிக்கலானது என்பதையும் அதன் வழிச் செயல்படுவது சிரமம் என்பதையும் புரிந்து கொள்கிறது. நீங்கள் UKவிற்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்தாலோ அல்லது சில காலங்கள் இங்கு இருந்திருந்தாலோ, அசைலம் ஹெல்ப்பானது இச்செயல்முறை மூலமாக உங்களுக்கு உதவுவதற்கான ஆதரவு மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவதற்கு  இங்கு உள்ளது.

அசைலம் ஹெல்ப்பானது UK முழுவதும் இயங்கி வருகின்றது, மேலும் அது இரகசியமான மற்றும் பாரபட்சமற்ற ஆலோசனையை உங்களுக்கு வழங்குவதற்காகவென்றே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உங்கள் நிலையைப் புரிந்து கொள்வதற்கும் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கும் உங்களுக்கு உதவுவதற்குத் தேவைப்படும் தகவல்களையும் ஆதாரங்களையும் நாங்கள் வழங்குகிறோம். எனினும், நாங்கள் உங்களுக்கு எந்த ஒரு வழக்கறிஞர் மூலமான ஆதரவையும் வழங்க இயலாது. ஆனால், பொருந்தும் நிலையில், உங்களுக்காகஉள்ளூர் ஆதரவு நிறுவனங்களுக்குப் பரிந்துரைக்க முடியும்.

அசைலம் ஹெல்ப் என்பது UKவில் அடைக்கலம் கோரியுள்ளோர் அல்லது UKவில் அடைக்கலத்தை  கோருவது எங்கு குறித்த தகவல்கள் தேவைப்படுவோர் போன்றோருக்கானதாகும்.

நாங்கள் உரிமைகள் மற்றும் உரிமை வழங்கல்கள் ஆகியவற்றின்மீது உங்களுக்கு ஆலோசனை  வழங்க இயலும், ஆனால் எங்களால் சட்டரீதியான ஆலோசனை அல்லது சட்டரீதியான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உங்களுக்கு வழங்க முடியாது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். எங்களால் உதவமுடியவில்லை எனில், நாங்கள் உங்களுக்குத் தகுதிவாய்ந்ததொரு சட்டரீதியான பிரதிநிகளின்  பட்டியலை வழங்குவோம்.