எமது சேவைகள்

அசைலம் அட்வைஸ் UK

அசைலம் ஹெல்ப் ஆனது UK முழுவதும் வயது வந்த அடைக்கலம் நாடுவோர்களுக்கும் அவர்களின் ஆதரவில் இருப்பவர்களுக்கும் இரகசியமான மற்றும் பாரபட்சமற்ற ஆலோசனையையும் வழிகாட்டலையும் அவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு மொழியில் வழங்குகிறது.

எங்களது அசைலம் அட்வைஸ் UK சேவையானது UK வில் உள்ள அடைக்கலச் செயல்முறையைப் பற்றிய தகவல்களையும் ஆலோசனையையும் வழங்குகின்றது. UK முழுவதும் இடம்பெற்றுள்ள எங்களது அடைக்கல ஆலோசனை UK குழுக்கள் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே உள்ளன.

அவை பின்வருவன போன்ற விஷயங்களின் மீது ஆலோசனையை வழங்க முடியும்:

 • அடைக்கலம் கோருவது எப்படி
 • நிதியியல் ஆதரவு
 • சட்டரீதியான பிரதிநிதித்துவத்தைக் கண்டறிதல்
 • அடைக்கலச் செயல்முறை
 • சுகாதாரப் பராமரிப்பை அணுகுதல்
 • தங்குமிட வசதி ஆதரவு
 • ஏதேனும் பிற அடைக்கலப் பிரச்சனைகள்

woman interviewing man

நாங்கள் எவ்வாறு உதவ முடியும்?

 • நீங்கள் அடைக்கலச் செயல்முறை அல்லது உதவி உரிமை வழங்கல்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ள விரும்பினால் எங்களின் பல மொழி அடைக்கல ஆலோசனைத் தகவல்கள் பக்கங்களை இங்கு (இணைப்பு) அணுகவும்.
 • நாங்கள் முதல்நிலை தங்குமிடவசதித் தளங்களில் உள்ள புதிதாக வந்துள்ள அடைக்கலம் நாடுவோர்களுக்கு நேருக்கு நேர் ஆலோசனை வழங்குகின்றோம்.
 • நாங்கள் UK வின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் உங்கள் மொழியில் தொலைபேசி மூலமான ஆலோசனையை எங்களது அடைக்கல ஆலோசனை உதவி எண்  (ஆலோசனை) மூலமாக வழங்குகின்றோம். தொடர்பு எண்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
 • உங்கள் பகுதியில் உள்ள உதவிகரமான சேவைகளைச் சென்றடைய உங்களுக்குத் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ வழிகாட்ட முடியும். தேவைப்பட்டால் (பாதிப்பிற்குள்ளாகக்கூடிய வாடிக்கையாளர்கள், குழு விளக்கக் கூட்டங்கள் அல்லது பின்வரும் குறிப்பிட்ட  கோரிக்கைகள் போன்றவற்றிற்காக) நாங்கள் ஒரு வெளிக்கள சேவையை வழங்க முடியும்.

நாங்கள் உங்களுக்கு வழக்கறிஞர் மூலமான ஆதரவை வழங்க இயலாது என்பதையும் தேவைப்பட்டால் ஒரு பொருத்தமான ஆதரவு நிறுவனத்திற்கு உங்களைப் பரிந்துரைப்போம் என்பதையும் தயவுசெய்து குறித்துக் கொள்க.

நாங்கள் உரிமைகள் மற்றும் உரிமை வழங்கல்கள் ஆகியவற்றின்மீது உங்களுக்கு ஆலோசனை வழங்க இயலும், ஆனால் எங்களால் சட்டரீதியான ஆலோசனை  அல்லது சட்டரீதியான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உங்களுக்கு வழங்க முடியாது என்பதைத் தயவுசெய்து குறித்துக் கொள்ளவும். எங்களால் உதவமுடியவில்லை எனில், நாங்கள் உங்களுக்குத் தகுதிவாய்ந்தொரு சட்டரீதியான பிரதிநிகளின்  பட்டியலை வழங்குவோம்.